என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத்தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் 1வது வெளியிடப்பட்ட இசைத்தட்டில் “உனக்கு தெரியுமா“ பாடல் சாதனை படைத்தது. அதாவது இலங்கையின் முதலாவது தமிழ் பாடல், ஒரு இலங்கை தமிழனால் உருவாக்கப்பட்டு, இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் இசையமைக்க முடியும், இந்திய சினிமாவைத்தாண்டி தனிப்பட்ட கலைஞர்களுக்கும் இசை உலகில் சாதனை படைக்க முடியும், அதுவும் இலங்கையில் முடியும் என்று நிரூபித்த பாடல் „ஈழத்து மெல்லிசை மன்னர்“ M.P.பரமேஷ் அவர்களால் உருவாக்கப்பட்ட “உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது“ என்று அவர் தனது காதலுக்காக அவரது காதலிக்கு உருவாக்கிய பாடலே தான். அது மட்டுமல்லாது 4வது இசைத்தட்டில் சிங்கள பாடல்களையம் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசைதட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும் இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள் தான். அவற்றை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து சிங்கள பாடகர்களை பாட வைத்து மீண்டும் புதிய பாதையில் சென்று தமிழிசை கலைஞர்களுக்கு பெருமை சேர்த்தார். M.P.பரமேஷ் அவர்களே சிங்கள மொழியிலும் உனக்கு தெரியுமா பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி வெளியிடப்பட்ட இசைத்தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. 1 இசைக்குழுவை கட்டி எழுப்பி, அதை ஒற்றுமையாக கலையாமல் வைத்திருக்க அவர் உழைத்த உழைப்பு மிகவும் அதிகம். இழப்புகள், பட்ட நஷ்டங்கள் மீண்டும் பெற முடியாதவை. அவமானங்கள் இழப்புகள் அவரின் வாழ்க்கையில் தினமும் வந்து போகும் விடயங்கள், இன்று வரை. உண்மையான உள்ளங்களுக்கு, கலையை மதிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உன்னதமான உள்ளம் புரியும். இன்றும் தனது காதலிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன். காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
© Copyright @ 2022 mpparamesh. All Rights Reserved.