ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்களின் கட்டுரை

இலங்கையின் மூத்த கலைஞனான “ஈழத்து மெல்லிசை மன்னர்” M.P.பரமேஷ் அவர்கள். ன்று ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப்பயணத்தை நிறுத்தவில்லை…. நிறுத்தபோவதுமில்லை… என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடிவரும் கலைஞர் . வாழ்ந்தால் இசையோடுதான்… என்று தனது வாழ்க்கையைபற்றியே இயற்றி, இசையமைத்துபாடியவர். சங்கீத சாம்ராஜ்யம் உருவாக்கியவர். 1968களில் இலங்கையின் முதலாவது தமிழ் இசைத்தட்டை இயற்றி, இசையமைத்து, பாடி வெளியிட்டு எமது கலைஞர்களுக்கும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர். பணத்தை எதிர்பார்க்காமல் அவமானங்களை தோல்விகளைகண்டு பயப்படாமல் எவர்தனது லட்சிய பாதையில் தொடர்கிறார்களோ… அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டு எமது மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்கள். தனது காதலிக்கு எழுதிய “ உனக்கு தெரியுமா ….? நான் உன்னை நினைப்பது…” என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத்தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் “ஈழத்துமெல்லிசை மன்னர்“ M.P.பரமேஷ்.


அதை தொடர்ந்து M.P.பரமேஷ் அவர்கள் 2.நீயின்றி நிலவு 3. போகாதே தூர போகாதே 4. நீ வாழுமிடமெங்கே 5. மனமாளிகை ரோஜா 6. எழுதுகிறேன் பாட்டு 7. அழைக்குமோசை கேக்கலையா 8. பாடலெனக்கிது முதல் தரம் தான் என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத்தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் 1வது வெளியிடப்பட்ட இசைத்தட்டில் “உனக்கு தெரியுமா“ பாடல் பெரும் சாதனை படைத்தது. அதாவது இலங்கையின் முதலாவது தமிழ் பாடல், ஒரு இலங்கை தமிழனால் உருவாக்கப்பட்டு, இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் இசையமைக்க முடியும், இந்திய சினிமாவைத்தாண்டி தனிப்பட்டகலைஞர்களுக்கும் இசை உலகில் சாதனை படைக்க முடியும், அதுவும் இலங்கையில் முடியும் என்று நிரூபித்தபாடல்.


„ஈழத்து மெல்லிசை மன்னர்“ M.P.பரமேஷ் அவர்களால் உருவாக்கப்பட்ட “உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது“ என்று அவர் தனது காதலுக்காக அவரது காதலிக்கு உருவாக்கிய பாடலே தான். இசைத்தட்டுகளில் வெளியிடபட்ட இந்த 8 பாடல்களும் இந்திய திரையிசை பாடல்களுக்கு சமமான தரத்தில் இருந்தது இவரின் பெரும் வெற்றி. அது மட்டுமல்லாது 4வது இசைத்தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3தமிழிசைதட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும் இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள் தான். அவற்றை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து சிங்கள பாடகர்களை பாட வைத்து தமிழிசைகலைஞர்களுக்கு பெருமை சேர்த்தார்.


பின்வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்குஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும். M.P.பரமேஷ் அவர்களே சிங்கள மொழியிலும் “உனக்கு தெரியுமா பாடலை”பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. உனக்கு தெரியுமா / Thigu neela asthekai 2. பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan 3. அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai 4. மனமாளிகை ரோஜா / Thura arte athithe ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத்தட்டுகள், Internet மற்றும் எந்த technologyம் இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியா வரை ஒலித்தது. அதற்கும் காதல் தான் தூண்டுதலாக இருந்தது. காதலிமாலினி அந்த காலம் சங்கீதம் படிப்பதற்காக இந்தியா சென்றிருந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தார். காதலிக்காக உருவாக்கிய பாடல்கள் அவரின் காதில் விழவேண்டுமென்பது M.P.பரமேஷின் பெரிய ஆசை. அதற்காகவே இலங்கை வானொலியில் பாடல்களை ஒலிக்கவைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். மூத்த கலைஞர்கள் உதவியுடன் அந்த கனவும் நினைவாகியது. பாடல்கள் தமிழர் வாழும் சகல இடங்களிலும் ஒலித்தன. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.


இலங்கையை பொறுத்தவரை தமிழ் சினிமா இப்பொழுது தான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் இலங்கையில். 30 வருடபோரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டனர். M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள் கூட மறந்து விட்டார்கள் என்பது கவலைக்குரியவிடயம் தான். 1986ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மனைவி மாலினி 2000ம்ஆண்டு இறையடி அடைந்து விட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள பரமேஷ் மாலினியின் மூத்த மகள், ஈழத்து மெல்லிசை குயில் "பிரபாலினி பிரபாகரன்" இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். இந்த இசைத்தம்பதிகளின் இசை வாரிசு பிரபாலினி பிரபாகரன் இந்தியாவில் 2016ம் ஆண்டில் முதல் ஈழ தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்க படுபவர் இந்த ஈழத்தமிழ் மகள். 2020ம் ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழா கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும எமதுசார்பிலும் தெரிவித்திருந்தோம்.


பல விருதுகளை பெற்ற M.P. பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப்பெற்றார். இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன் எமது M.P. பரமேஷ் அவர்கள். காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! ஒருஇசைக்குழுவை கட்டி எழுப்பி, அதை ஒற்றுமையாக கலையாமல் வைத்திருக்க அவர் உழைத்த உழைப்பு மிகவும் அதிகம். இழப்புகள், பட்டநஷ்டங்கள் மீண்டும் பெற முடியாதவை. இந்த இசைத்தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது…?என்று கேட்டோம். இசைத்தட்டுகளைவெளியிட வேண்டிய காரணம் எனது இசைக்குழு தொடர்ந்து இயங்காமல் போனது தான். எனது பாடசாலை தோழர்களையும் மற்றும் சில இசைக்கலைஞர்களை இணைத்துதான் முதலில் எனது இசைக்குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கு அந்த குறிக்கோளும் இல்லை.ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையைகவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது. அவர்கள் என் இசைக்குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக என்னுடன்இருக்கமுடியவில்லை. இலங்கையில் திறமையானஇசைக்கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக்குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம் பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில “ உனக்கு தெரியுமா…?மீனிசை பாடிவரும், யாழ் பாடி யாழ்பாணம், திருகோணமலை எங்கள் நாடு “என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இந்த பிரபலமான பாடல்களை இசைத்தட்டுகளில் பதிவு செய்து விடு என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத்தட்டுகள்வெளியிடும் முன் பரமேஷ் கோணேஷ் "இசைத்தென்றல்" என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம். எனது அம்மாவின்வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக்கொண்டேன். நான் பாடல்வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது என்று பொறுப்புக்களை கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று அங்கேயே தங்கி இசைத்தட்டுவெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். என் நண்பன் எனது இசைக்குழுவில் முக்கிய நபர், S.E. மகேஷ் எனக்கு பொருளாதாரரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிடகூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்வதில்லை. தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக்கருவி (keyboard) வாசிப்பவராக இருந்தார். அத்துடன் வாத்தியக்கருவி ஒருங்கமைப்பாளராக (orchestrator) இருந்தார். அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள். மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன்,அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள். நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும் பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை வாத்தியகலைஞர்களையும் நாடினேன். அவர்கள் மிகவும்திறமையான வாத்திய கலைஞர்கள். அந்த காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும் பொழுது அவர்களை பயன்படுத்த ஒழுங்கு செய்தேன். அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notation தான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வரத்தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான்அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையான -வற்றை கேட்டும், சொல்லியும், பாடியும் பெற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்குஉதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் PappaMyskin அவர்கள். மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி வாத்திய கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத்தரம் இணைத்தவர்கள். இன்று நான் ஒரு விடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் prabalini தான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமைகொண்டாட என் அனுமதி இல்லை என்று மிகவும் திடமாக சொல்லிக்கொள்கிறேன் என்று பதிலளித்தார் M.P.Paramesh அவர்கள். என்றும் ஒரே சிந்தனை, அது இசை மட்டும் தான். பல கலைஞர்கள் கலை வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முடியாது என்ற பட்சத்தில் வேறு தொழில் தேடி சென்று விடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை சிலர் மட்டுமே கலையுடனேயே வாழ்வை தொடர்வார்கள். அவர்களுக்கு பாராட்டும் கவுரவமும் கிடைப்பதட்கு மேலாக கிடைப்பது அவமானங்கள் மட்டுமே. அந்த வலிகளையும் தனது வரிகளில் வரைந்து இசையுடன் இணைத்து சுமைகளை பாடி ஒரு ஒப்பற்ற கலைஞனாக வாழ்ந்து காட்டுபவர் எமதுகவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அவர்கள். 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார், ஆdhலும் பொருளாதார ரீதியில்எல்லாவற்றையும் தரமான பதிவுசெய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை பதிவு செய்தும், மீள்பதிவுசெய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார். M.P.பரமேஷ் அவர்களின் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 2023ல் புதிய பாடல்களை வெளியிடவிருக்கும் “ஈழத்து மெல்லிசை மன்னர் “ M.P. பரமேஷ் அவர்களுக்கு எமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்க நூறாண்டு... உங்கள் இசைப்பணி தொடரட்டும்.


youtube link: https://youtu.be/dh7gI-XF37k


Articleby : வைஷாலி சுப்பிரமணியம்- சென்னை, இந்தியா


M.P.PARAMESH BIRTHDAY SPECIAL EDITED

ஈழத்து மெல்லிசை மன்னனின் விலைமதிக்க முடியாத இசைப்பொக்கிஷம். அழகான கவி வரிகளும் இனிய இசையும் சேர்ந்த முத்தான பாடல்கள் என்றென்றும் என்னைப்போன்ற இசைப்பிரியர்கள் மனசில் நிலைத்திருக்கும். உங்கள் படைப்புக்கும் பணிகளுக்கும் நன்றியுடன் அன்புகலந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

article image

ஈழத்து மெல்லிசை மன்னனின் விலைமதிக்க முடியாத இசைப்பொக்கிஷம். அழகான கவி வரிகளும் இனிய இசையும் சேர்ந்த முத்தான பாடல்கள் என்றென்றும் என்னைப்போன்ற இசைப்பிரியர்கள் மனசில் நிலைத்திருக்கும். உங்கள் படைப்புக்கும் பணிகளுக்கும் நன்றியுடன் அன்புகலந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

article image

ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் நேற்று மாலை அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார். இலங்கை வானொலிக்கு பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர்.

அன்புடன் பரமேஸ் நீலச்சேலை கட்டிவந்தாள் என்தன் காதலி, என்ன குரல், என்ன மெட்டு, மெய்சிலிர்க்க வைக்கிறது எனக்கு தெரியுமா பாடல் ஆரம்பமாக இருக்கலாம் அது உச்சத்தை தொட்டு இருக்கலாம் அத்தோடு நின்று இருந்தால். பரமேஷ் இன்று மறக்கப்பட்ட வராக இருந்து இருப்பார் அவர் உனக்கு தெரியுமா பாடலுக்கு பின் தொடர்ந்து பாடிய பாடல்கள்தான் அவரை மெல்லிசை மன்னராக்கியது. அவரை ஈழத்து மெல்லிசை மன்னர் என்பதில் எனக்கு கொஞ்சமும் உடன் பாடு இல்லை மெல்லிசை மன்னர் அவர் என்பதை நான் ஈழத்தவன் என்ற கர்வத்தோடு ஆமோதிக்கிறேன். சினிமா பாடலுக்கும் மெல்லிசை பாடலுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதை உங்களைத் தவிர வேறு எவராலும் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்க முடியாது. உங்களுக்கு வெற்றி மணி 2019 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தது இந்த ஜென்மத்தில் நாம் செய்த சிறந்த கெளரவம் என்று மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சின்ன வருத்தம் கலைஞருக்கு கட்டாயம் கடவுள் முதுமையில் இருந்து விதிவிலக்கு அளித்திருக்கவேண்டும். இறுதியாக மகள் பிரபாளினி உங்கள் இசையை காலத்திற்கு என்றால் போல் பரிமாறுகிறாள். வேறு என்ன வேண்டும் மெல்லிசை மன்னரே. முழுமையாக பார்த்து என் கருத்தை பதிவு செய்துள்ளேன். சும்மா Like போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை

ஈழத்து மெல்லிசை மன்னரின் இசைப்பயணம் | Virakesari.lk https://www.virakesari.lk/article/143256

செந்தாமரை நாளிதழ் கட்டுரை :53ஆண்டுகள் ஓயாது ஒலிக்கும் 'உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது ..'

தமிழ் முரசு நாளிதழ் கட்டுரை:'உனக்குத் தெரியுமா' புகழ் ஈழத்து மெல்லிசை மன்னர் அவர்களின் கட்டுரை...........

ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் இலங்கையின் மூத்த கலைஞர். இலங்கையின் முதலாவது தமிழிசைதட்டை தயாரித்தவர் அவர்களை பற்றிய வாழ்க்கைவரலாறு இணையதளம்

My Contacts

Germany, United States of America


prabalini007@gmail.com


Other Links